
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், பேருந்துக் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

டீசல் விலை நேற்று(09) நள்ளிவு அதிகரிக்கப் பட்டாலும், அது பேருந்து கட்டணத்தில் தாக்கம் செலுத்தாதென
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நிலான் மிரண்டா தெரிவித்தார்.
அதற்கமைய, தற்போதுள்ள கட்டணங்கள் அவ்வாறே நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Follow Us



