இலங்கைஉலகம்விளையாட்டு
Trending

FIFA உலகக் கிண்ண A பிரிவு போட்டியில்,செக் குடியரசை வென்றது தென்கொரிய அணி!

FIFA உலகக் கிண்ணத் தொடரின் A பிரிவில் நடைபெற்ற போட்டியில், செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியா அணி வெற்றிபெற்றுள்ளது.

மெக்சிகோவின் குவாடலஜாரா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதல் பாதிவரை கோல் ஏதுவும் போடப்படாமல் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

இரண்டாவது பாதியில் செக் குடியரசு அணியின் லடிஸ்லாவ் முதல் கோலைப் போட்டார்.

எனினும், 8 நிமிடங்களுக்குப் பின்னர் தென் கொரியாவின் ஹ்வாங் இன்-பியோம் கோல் அடித்து போட்டியை 1-1 என சமநிலைப்படுத்தினார்.

தொடர்ந்து 77ஆவது நிமிடத்தில் செக் குடியரசு அணியின் டோமஸ் சௌசெக் அடித்த கோல், நடுவரால் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, 80ஆவது நிமிடத்தில் தென் கொரியாவின் ஹியோன்-க்யு வெற்றிக்கான கோலைப் பதிவு செய்ததன் மூலம், தென் கொரியா 2-1 என்ற கணக்கில் வெற்றியை உறுதி செய்தது.

இந்த வெற்றியின் மூலம், தொடக்கப் போட்டியில், தென்னாபிரிக்காவை 2-0 என வீழ்த்திய மெக்சிகோ அணியுடன் தென் கொரியாவும் தலா 3 புள்ளிகளுடன் A பிரிவில் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button