இலங்கைஉலகம்மலையகம்
Trending

மண்சரிவு மஞ்சள் எச்சரிக்கை நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு விடுப்பு!

நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தால் நேற்று பிற்பகல் 4:00 மணி முதல் இன்று பிற்பகல் 4:00 மணி வரை இந்த மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர மற்றும் அகலவத்தை பிரதேச செயலக பிரிவுகளுக்கு ம்,

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலக பிரிவு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கும்,

இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, பெல்மதுள, கொடகவெல, எலபாத, கலவான, இரத்தினபுரி மற்றும் நிவித்திகல பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் பெய்த மழைவீழ்ச்சி 75 மில்லிமீற்றரையும், மண் நீர் குறியீடு 100 மில்லி மீற்றரையும் தாண்டியுள்ளதால்,

மழை தொடரும் சந்தர்ப்பத்தில் மண்சரிவு, சாய்வுகள் இடிந்து விழுதல், பாறைகள் விழுதல் மற்றும் தரை உள்ளிறக்கம் போன்ற அபாயங்கள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button