
மத்திய கிழக்கில் இடம்பெற்றுவந்த போர்ச் சூழல் காரணமாக மூடப்பட்டிருந்த ஈரான் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, ஈரான் தலைநகர் டெஹ்ரானிலுள்ள பிரதான வானூர்தி நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
தலைநகர் டெஹ்ரானிலுள்ள இமாம் கொமெய்னி மற்றும் மெஹ்ராபாத் ஆகிய இரண்டு முக்கிய வானூர்தி நிலையங்களும் இயங்கு நிலைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் காரணமாக ஈரானின் வான்வழிப் போக்குவரத்துச் சேவைகள் முற்றாக
இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விமான சேவை நிலையங்களை மீண்டும் திறந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

Follow Us



