இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்

ஊழல் இலஞ்ச குற்றச்சாட்டுக்கள் மற்றும், உயிரத்த ஞாயிறு தாக்குதல் குற்ற சாட்டுகளில் தப்பிப்பதற்காகவே எதிர் கட்சிகளின் கூட்டணி அமைந்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திர சேகர் குற்றம் சாட்டினார்.

யார் தென்மராட்சி மீசாலையில் இன்று(25) நடந்த நிகழ்வில் கலந்து கொண்ட போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.

இவ்வாறான குற்றச்சாட்டுகளை ஈடுபட்டவர்கள் முன்னால் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பெரும் புள்ளிகள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நமது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் இதற்கு எதிரான நடவடிக்கையில்nn இருந்து தப்பிக்கவே எதிர்க்கட்சிகள் இந்த கூட்டணியை அமைத்து வருகிறது.

இவர்கள் அமைக்க இருக்கும் கூட்டணி செல்லுபடி ஏற்ற கூட்டணியாகவும் என சஜித் பிரேமதாசா காலையில் ஒரு வார்த்தையும் மாலையில் ஒரு வார்த்தையும் நாடாளுமன்றத்தில் ஒரு ஜோக்கர் ஆகவும் மாறியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவருக்கான தகமையும் அவரிடம் இல்லை அதனை தக்க வைக்கவே அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டை முன் வைக்கின்றனர்

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button