இலங்கைவடக்கு மாகாணம்
Trending

வீதியில் நடந்து சென்ற இளைஞர்கள் மீது கார் மோதியதில் இருவர் பலி!

வவுனியா கனகராயன் குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து A-9 வீதி கனகராயன் பெரியகுளம் பகுதியில் நேற்று இரவு (02) இடம்பெற்றுள்ளது.

ஹயஸ் வாகனம் கார் மீது மோதியதில் குறித்த கார் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் மீது மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதன் போது கனக ராயன் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது விபத்துடன் தொடர்புடைய சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்த இருவரில் ஒருவர் யாழ் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரின் மகனென தெரிவிக்கப்படுகிறது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button