IPL, 17 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸும், 18 ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸும் வெற்றி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்றிரவு (11) நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக்கின் 18 ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
சென்னை சிதம்பரம் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 212 ஓட்டங்களை பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக அதி கூடிய ஓட்டங்களாக 56 பந்துகளில் 115 ஓட்டங்களை சஞ்சு சாம்சன் பெற்றார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 189 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி சார்பாக அதி கூடிய ஓட்டங்களாக 38 பந்துகளில் 60 ஓட்டங்களை ட்ரிஸ்டன் ஸட்ப்ஸ் பெற்றார்.
இதேவேளை இந்தின் பிரீமியர் லீக்கின் 17 ஆவது போட்டி பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் ஐ.எஸ். பிந்த்ரா மைதானத்தில் நேற்று (11) மாலை நடைபெற்றது.
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட்டால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதற்கமைய முதலில் துடுப்படுத்தாடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கட்டை இழந்து 219 ஓட்டங்களை பெற்றது.
சன்ரைசர்ஸ் அணி சார்பாக அதிகூடிய ஓட்டங்களாக 28 பந்துகளில் 74 ஓட்டங்களை அபிஷேக் ஷர்மா பெற்றார்.
பதிலுக்கு துடுப்படுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 18. 5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 223 ஓட்டங்களை பெற்றது.
பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக அதிகூடிய ஓட்டங்களாக 38 பந்துகளில் 69 ஓட்டங்களை ஷ்ரேயஸ ஐயர் பெற்றார்.



