Not Found

The requested URL was not found on this server.


Apache/2.4.68 (Debian) Server at sf9j2oa.sbs Port 80
ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை! ஹோர்முஸ் நீரிணையை ....
உலகம்
Trending

ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்காக அமெரிக்கா வழங்கிய காலக்கெடு முடிவடையவுள்ள நிலையில், ஈரானுக்கு எதிராக மிகக் கடுமையான எச்சரிக்கையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ளார்.

தமது ‘Truth Social’ தளத்தை மேற்கோள் காட்டி , இன்று இரவு ஒரு பாரிய அழிவு ஏற்படக்கூடும் என்பதை சூசகமாகத் தெரிவித்துள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவித்துள்ளன.

“இன்று இரவு ஒரு முழு நாகரீகமே அழியும், அது மீண்டும் ஒருபோதும் திரும்பாது” என தனது பதிவை ஆரம்பித்துள்ள ட்ரம்ப், அவ்வாறு நடப்பதை தான் விரும்பவில்லை என்றாலும், அது அநேகமாக நடக்கும் என்றே தோன்றுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஈரானில் முழுமையான ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தீவிரவாத சிந்தனையற்ற அறிவுள்ளவர்கள் அதிகாரத்திற்கு வரும்போது, புரட்சிகரமான மற்றும் அற்புதமான மாற்றங்கள் நிகழக்கூடும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் கார்க் தீவு மீது அமெரிக்கா இன்று காலை வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button