இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்

யாழ்.தையிட்டி காணிகள் 17 ஆம் திகதி அளவீடு!

யாழ்.தையிட்டி காணிகள் 17 ஆம் திகதி அளவீடு!

யாழ்.தையிட்டியில் விகாரையைச் சூழவுள்ள காணிகள் எதிர்வரும் 17 ஆம் திகதி அளவீடு செய்யப்படவுள்ளது.

யாழ்.தையிட்டியில் காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் (11) யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன்,

மேலதிக அரசாங்க அதிபர்களான க.சிவகரன், பா.ஜெயகரன், தெல்லிப்பழை பிரதேச செயலர், காணிகளின் உரிமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிலுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியை விடுவிக்குமாறுகோரி 17 காணி உரிமையாளர்கள் கோரிக்கை முன்வைத்து போராட்டங்களை மேற்கொண்டுவந்தனர்.

இதனையடுத்து புத்த சாசன அமைச்சில் கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் குறித்த ஆவணங்கள் கையளிக்கப்பட்டிருந்தன.

அதனையடுத்து காணிகளின் உரிமைகளை அளவீடு செய்து
உறுதிப்படுத்துமாறு நில அளவை திணைக்களத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

அதற்கமைய எதிர்வரும் 17ஆம் திகதி காலை 9.00 மணிக்கு காணிகளை அளவீடு செய்ய நேற்றைய கலந்துரையாடலில் தீர்மனிக்கப்பட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button