உலகம்விளையாட்டு
Trending

T 20 பதினோராவது போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்களால் வெற்றி!

நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு இராட்சிய அணிகளுக்கு இடையில் சென்னை சிதம்பரம் விளையாட்டு அரங்கில் நேற்று(10) நடைபெற்ற உலகக்கிண்ண 20க்கு 20 கிரிக்கெட் தொடரின் 11 ஆவது போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு இராட்சிய அணி துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதற்கு அமைய துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராட்சிய அணி 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்றது.

ஐக்கிய அரபு இராட்சிய அணி சார்பாக மொஹமட் வசீம் 66 ஓட்டங்களை பெற்றார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 175 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்பின்றி 15.2 ஓவர்களில் வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button