அரச திணைக்களங்களில் கடமை புரியும் அரச உத்தியோகஸ்தர்களின் பதவி உயர்வு போட்டிப் பரீட்சைக்கான தயார்படுத்தல் கருத்தரங்கானது எமது கபிலர் சமூதாய மேம்பாட்டுப் பேரவையின் அலுவலகத்தில் 2021.03.23 அன்று நடைபெற்றது.
இத்தயார்படுத்தல் கருத்தரங்கானது எமது நிறுவனத்தின் இயக்குநரும்¸ வளவாளருமான திரு.செ.வசந்தநேசன் அவர்களினால் நடாத்தப்பட்டதுடன்¸ இக்கருத்தரங்கில் உயர்நீதிமன்றம் (திருகோணமலை)¸ விவசாய திணைக்களம்¸ மாவட்ட செயலகம்¸ உதவி தேர்தல்கள் திணைக்களம் போன்றவற்றில் கடமைபுரியும் அரச உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கான பதவி உயர்வு போட்டிப் பரீட்சையானது எதிர்வரும் 2021.03.27 அன்று நாடளாவிய ரீதியில் இடம்பெறவிருப்பது இங்கு குறிப்பிட வேண்டிய விடயமாகும்.
A seminar was conducted on 23rd March 2021 by the Director and resource person of our organization Mr.S.Vasanthanesan, at our office for the officers who are working in government sectors with a view to prepare them for the upcoming competitive examination for promotion of the government officers.
Officers from Trincomalee high court, Department of Agriculture, District Secretariat, Department of Election, Trincomalee, were taken part in this seminar. This exam is scheduled to be held on 27th March 2021 island wide.