மீண்டும் ஆரம்பித்தது WhatsApp பிரச்சினை
காலையில் எழும்பினால் WhatsApp, பகலில் சாப்பிடும் போதும் WhatsApp, வேலைசெய்யும் போதும் WhatsApp, இரவு தூங்கும் போதும் WhatsApp என்று எமது வாழ்வில் WhatsApp செயலியின் தாக்கம் பன்மடங்காகியுள்ளது. இவ்வாறு இருக்கையில் WhatsApp செயலி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட Privacy Policy பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்று சொல்லலாம்.
பெப்ரவரி 08ம் (February) திகதிக்கிடையில் WhatsApp அறிவித்த Privacy Policy க்கு OK கொடுத்தால்தான் தொடர்ந்தும் WhatsApp ஐ அதன்பயனர்கள் பயன்படுத்த முடியும் என்ற அறிவிப்பினை WhatsApp நிறுவனம் வெளியிட்டிருந்தது. இவ்அறிவிப்பினை தொடர்ந்து பல பிரச்சினைகள் எழத்தொடங்கியது என்று சொல்லலாம்; குறிப்பாக WhatsApp செயலியினூடைய பயனர்களின் தகவல்கள் மற்றும் பாதுபாப்பு (Data , Privacy பறிபோகும் என்று பலர் Telegram, Signal போன்ற மாற்று செயலிகளினை பயன்படுத்த தொடங்கியது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்.
எனவே உடனடியாக ஒரு அதிரடிமுடிவினை வெளியிட்ட WhatsApp நிறுவனம் பயனர்களின் அனைத்து தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும் என்றும் மாறாக வணிகரீதியான கணக்கு வைத்திருப்பவர்களின் (Business Accounts) தகவல்கள் (Data) மாத்திரம் எடுக்கப்படும் என்று கூறி தமது சார்பில் கருத்தினை வெளியிட்டிருந்ததோடு தமது முடிவுகள் அனைத்தினையும் தற்காலிகமாக தள்ளிப்போட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது மே மாதம்15ம் திகதியினை தனது இறுதித்தினமாக குறித்துள்ளது WhatsAppநிறுவனம். மே மாதம் 15ம் திகதிக்கு இடையில் WhatsApp ஐ அதன் பயனர்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டுமாயின் தங்களது Privacy Policy எல்லாவற்றிக்கும் பயனர்கள் OK கொடுக்க வேண்டும்¸ இல்லையேல் உங்களது WhatsApp ஐ தொடர்ந்து பயன்படுத்த முடியாது; அதாவது உங்களது WhatsApp இல் Messages ஐ அனுப்பவோ! பெறவோ! முடியாது; Notifications மாத்திரம் வரும்; அதே வேளையில் WhatsApp Call மாத்திரம் எடுக்க கூடியதாக இருக்கும் எனினும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இவ்வசதி அனுமதிக்கப்படும் என்று தமது புதிய அதிரடி முடிவினை வெளியிட்டுள்ளது WhatsApp.
மேலும் இவ்முடிவில் மே மாதம் 15 க்கு இடையில் இன் இந்த புதிய கொள்கையினை ஏற்றுக்கொள்ளாத பயனர்களின் கணக்குகள்(Accounts) உடனடியாக WhatsApp இல் இருந்து நீக்கப்படாது என்றும்; இதற்கு மாறாக மேலதிகமாக 120 நாட்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதோடு 120 நாட்களுக்குள் தமது கொள்கையினை ஏற்றுக்கொள்ளாத பயனர்களின் கணக்குகள் அனைத்தும் முடக்கப்படும் என்றும் WhatsApp நிறுவனம் தகவலினை வெளியிட்டுள்ளது.
எது எவ்வாறு எனினும் மே 15ம் திகதி வரை மாத்திரமே WhatsApp தமது பயனர்களுக்கு இறுதி திகதியாக குறித்து வைத்துள்ளது. எனவே WhatsApp செயலியினை தொடர்ந்தும் பயன்படுத்துவதா!இல்லையா! என்ற முடிவு பயனர்களின் கையில்தான் உள்ளது.
நன்றி.
செய்தி நிருபர் கி.கிஷாந்.
Restarted WhatsApp Problem
The impact of the WhatsApp processor in our lives has multiplied. In 2021 January WhatsApp released a Privacy Policy and it mad many people shocked.
They made an announcement that everyone has to press “OK” for their privacy policies and then only users can continuously use WhatsApp. This announcement made many issues in many ways. People started using many other apps like Telegram, Signals and many more; Because of that the privacy of WhatsApp users will be snatched away.
So immediately WhatsApp made and announcement that ” We do not take personal details of our users; unless a Business accounts and they expressed their opinion that there is no need to be afraid and they postponed their decision till May 15th. If users want to continue using WhatsApp they should press “OK”; otherwise users can not continue this app. But users will get notifications and WhatsApp calls only for a limited time only.
Users who do not give “OK” before May 15th their account will be access for 120 days and will deleted automatically after 120 days.
What even it is the end date will be May 15th. Therefore it is in our hand to decide whether to use WhatsApp or not.
Thankyou.