Life Style

இந்த உணவு வகைகளை தப்பி தவறிகூட தவறாக சாப்பிட்டுவிடாதீர்கள்..!!

பச்சை நிறத்தில் மற்றும் முளைக்கட்டிய உருளைக்கிழங்கை சாப்பிடுவது, விஷத்தை சாப்பிடுவதற்கு சமம். ஏனெனில் இந்த உருளைக்கிழங்கால் வாந்தி, அடிவயிற்று வலி மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

இறைச்சிகள், கோழி அல்லது கடல் உணவுகளை வாங்கி, அவற்றை உயர் வெப்பநிலையில் சமைக்கும் போது, அவற்றில் உள்ள புரோட்டீன்கள் மாற்றமடைந்து, ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதாக மாறுகிறது.

கசப்பான பாதாமில் ஹைட்ரஜன் சயனைடு அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 5-10 கசப்பான பாதாமை சாப்பிட்டால், அது பெரியவர்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும்.

வெள்ளை பிரட்டில் பதப்படுத்தப்பட்ட மாவு மற்றும் சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், அவை ஆரோக்கியமற்றதாகும். வெள்ளை பிரட்டை அடிக்கடி சாப்பிடுவது உடல் பருமன், இதய நோய் மற்றும் சர்க்கரை நோயை ஏற்படுத்தும்.

பிரேசில் நட்ஸில் செலினியம் அதிகம் உள்ளது. இதனை ஒரு நாளைக்கு எடுக்க வேண்டிய அளவை விட அதிகளவு செலினியத்தை உண்பது, செரிமான பிரச்சனைகள், களைப்பு மற்றும் தலைமுடி உதிர்ப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

தினமும் பாலை குடித்து வந்தால், பெருந்தமனி தடிப்பு நோயின் அபாயம் குறைவதோடு, இதன நோன் அபாயத்தைக் குறைக்கும்.

முக்கியமாக பெண்கள் பால் குடிப்பது, கருப்பை புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். ஆண்கள் குடித்தால், புரோஸ்டேட் புற்றுநோயை உண்டாக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button