இலங்கைஉலகம்
Trending

அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் கதிரியக்க தொழில் நுட்பவியலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

நாடு முழுவதுமுள்ள அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் கதிரியக்க தொழில் நுட்பவியலாளர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் இன்று(21) ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 8.00 மணி முதல் 24 மணிநேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு எதிராக சுகாதார அமைச்சு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக கதிர் இயக்க தொழில் நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button