இந்தியாஉலகம்விளையாட்டு
Trending

இந்தியன் பிரீமியர் லீக்கின் எட்டாவது ஒன்பதாவது போட்டிகள் நிறைவு!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் எட்டாவது மற்றும் ஒன்பதாவது போட்டிகள் நேற்று (04) இடம்பெற்றுள்ளன.

எட்டாவது போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று மதியம் 3.30 மணியளவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 விக்கெடுக்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கேப்பிட்டல் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதற்கமைய, முதலில் துடுப்படுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்படுத்தாடிய, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அதற்கமைய, இந்தியன் பிரீமியர் லீக், எட்டாவது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து நேற்றிரவு இடம்பெற்ற இந்தியன் பிரீமியர் லீக் ஒன்பதாவது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு (04) 7.30 மணியளவில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில், நாணய சுழற்சியால் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி துடுப்பெடுத்தாட்டடத்தை தேர்வு செய்தது.

அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய, குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அதற்கமைய, இந்தியன் பிரீமியர் லீக், ஒன்பதாவது போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button