
சுவிட்சர்லாந்து செங்காலன்(Tamil) நாடாளுமன்றத்தின்
முதல்வராக சமூகநலன் செயற்பாட்டாளர் துரைராஜா ஜெயக்குமார்
இன்று(21) பதவியேற்றுக்கொண்டார்.
செங்காலன் நாடாளுமன்றத்தில் அதற்கான அமர்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
அவையில் திருக்குறள்
மூன்று தடவைகள் முன்மொழியப்பட்டு டொச்
மொழியில் விளக்கியுரைக்கப்பட்டது.
தமிழர் பண்பாட்டோடு கூடிய இசையும்
அவையரங்கில் இசைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழர் சிற்றுண்டி உணவுகள் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டன.
சுவிட்சர்லாந்தில் வாழும் தமிழ் சமூகத்தின் கல்வி, சமூகநலம், மனிதாபிமான உதவி போன்ற துறைகளில் ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு செயற்பாடுகளை மேற்கொள்வது இந்த செங்காலன் நாடாளுமன்றத்தின் செயற்பாடாகும்.

Follow Us



