இந்தியாஇலங்கைஉலகம்

ஊடக பயிற்சிக்காக இலங்கை ஊடகவியலாளர் குழு இந்தியா பயணம்!

இலங்கையைச் சேர்ந்த 30 ஊடகவியலாளர்களை கொண்ட குழு, இம்மாதம் 26 முதல் பெப்ரவரி 1 திகதிவரக வரை ஹைதராபாத்தில் நடைபெறும் அறிவு பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்குபற்றுவதற்காக பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்தப் பயிற்சிநெறியில், ஊடகங்களில் புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், நல்லாட்சியில் சமூக ஊடகங்கள், ஊடக பரப்பில் டிஜிட்டல் மாற்றத்தின் பின்னணியில் புதிய திறன்கள், உண்மைச் சரிபார்ப்புக்கான வழிகள் மற்றும் மற்றும் தரவு அடிப்படையான அறிக்கையிடலின் பின்னணியில் திறன்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 1000 இலங்கை சிவில் சேவை அதிகாரிகள் மற்றும் நிபுணர்களை உள்ளடக்கிய குழுவினர் இவ்வாறான பயிற்சி நெறிக்காக அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button