இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்

கிளிநொச்சி தர்ம்புரத்தில் கோர விபத்து – இளைஞர்கள் இருவர் பலி!

கிளிநொச்சி, பரந்தன் – முல்லைத்தீவு ஏ 35 வீதி, தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் ஸ்தலத்தில் உயிழந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்றிரவு(03) இடம்பெற்றுள்ளது.

தர்மபுரம் 10 ஆம் வீதி ஊடாகச் சென்றுகொண்டிருந்த மோட்டார் கிரேடர் (Motor Grader) வாகனத்தோடு, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 19 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த இளைஞர்களின் சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மரண விசாரணையின் பின்னர் சடலங்கள் உறவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button