இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
தேசிய மக்கள் சக்தியின் மே தின கூட்டம் யாழில்!

தேசிய மக்கள் சக்தியின் உழைப்பாளர் தின பேரணி யாழ்ப்பாணம் முலவைச் சந்தியில் இன்று பிற்பகல் 4 மணியளவில் ஆரம்பமானது.


கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் ஆரம்பமான குறித்த எழுச்சிப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தரா, ஜெ.றஜீவன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.


முலவைச் சந்தியில் ஆரம்பமான குறித்த பேரணி யாழ் வைத்தியசாலை வீதியூடாக வேம்படிச் சந்தி, யாழ் மத்திய பேருந்து நிலையம், சத்திரத்துச் சந்தி ஊடாக கே.கே.எஸ் வீதி, பண்ணைச் சந்தியை அடைந்து அங்கிருந்தி யாழ் பிரதான வீதி யூடாக பயணித்த பேரணி
யாழ்.நெடுந்தூர பேருந்து நிலையத்தை சென்றடைந்தது.


இதன்பின்னர் யாழ்.நெடுந்தூர பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரதான மேடையில் கூட்டம் இடம்பெற்றது.

Follow Us



![[17:45, 11/06/2026] VJ Dreams Creation: ... [17:45, 11/06/2026] VJ Creations Rajani Anna: நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி பெறப்படவில்லை!](https://tamilinfo.net/wp-content/uploads/2026/06/WhatsApp-Image-2026-06-11-at-17.45.22-390x220.jpeg)