
மெக்சிகோவிலிருந்து உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கியூபா நோக்கிப் பயணித்த இரு கப்பல்கள் காணாமல் போயுள்ளன.
இந்தக் கப்பல்களுடனான அனைத்துத் தொடர்புகளும் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காணாமற்போன இரண்டு கப்பல்களிலும் மொத்தம் 9 ஊழியர்கள் இருந்துள்ளனர்.
கரீபியன் கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, திடீரென தகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழந்துள்ளன.
கப்பல்கள் காணாமல்போனதைத் தொடர்ந்து, மெக்சிகோ கடற்படை, கரீபியன் கடல் பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
வானூர்திகள் மற்றும் ரோந்துப் படகுகள் மூலம் தேடுதல் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

கடல் சீற்றம் அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தத் தொடர்பு துண்டிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.



