இலங்கை
Trending

கால்நடைகளைத் திருடும் கும்பலை கட்டுப்படுத்தக் கோரி வேலணையில் பண்ணையாளர்கள் போராட்டம்!

கால்நடைகளைத் திருடி இறைச்சியாக்கும் கும்பலை கட்டுப்படுத்த சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் முழுமையாக பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கோரி யாழ்.வேலணையில் இன்று (12) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தீவகம் தெற்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தால் குறித்த போராடடம் வேலணை வங்ககாவடியில் மேற்கொள்ளப்பட்டது.

வங்களாவடி சந்தியில் ஆரம்பமான குறித்த போராட்டம் நடைபவனியாக வேலணை பிரதேச செயலகம் வரை சென்றது.

இதன்போது
“வறிய பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே” “சட்ட ஒழுங்கை நடைமுறைப்படுத்த பொலிசாருக்கு துணைநிற்போம்”
” வாழ்வாதாரத்தை பறிக்காதே” ‘ஊர் கூடித் திருட்டை ஒழிப்போம்”

உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டக்காரர்கள்
பிரதேச செயலகம் வரை சென்றனர்.

அங்கு பிரதேச செயலர் தனபாலசிங்கம் அகிலனிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button