இந்தியாஇலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
Trending

"தென்னிந்திய கலைஞர்களின் சாஸ்திரிய ஆற்றுகை"சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில்!

சாவகச்சேரி நகராட்சி மன்றமும், யாழ்.இந்திய துணைத்தூதரகமும் இணைந்து நடாத்திய “தென்னிந்திய கலைஞர்களின் சாஸ்திரிய ஆற்றுகை” நிகழ்வு சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் நேற்றிரவு (27) சிறப்பாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வுக்கு யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

நிகழ்வில் தென்னிந்திய கலைஞர்களின் மோகினியாட்டம் மற்றும் கதகளி ஆகிய ஆற்றுகைகள் இடம்பெற்றன.

கலைமாமணி ரஷ்மி மேனன் தலைமையில் மோகினி ஆட்டமும், கலாஸ்ரீ ஏவூர் ராஜேந்திரபிள்ளை தலைமையில் கதகளியும் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து இந்திய கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button