Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்

யாழ்.சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு மூன்று மாடிகளைக் கொண்ட 30 வகுப்பறைகளுக்கான புதிய கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

கல்லூரி அதிபர் ந.சர்வேஸ்வரன் தலைமையில் நேற்று(09) இடம்பெற்ற நிகழ்வில்,
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி,

தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர், சாவகச்சேரி நகர சபைத் தவிசாளர், பாடசாலையின் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது பாடசாலை மாணவர்களின் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகள் நிகழ்வைச் சிறப்பித்தன.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
Dreams Creations Photo & Video