
திருகோணமலை கிண்ணியா – உப்பாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் 15 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிண்ணியா உப்பாறுப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழப்படுவதாக கடற்படைக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று (06) மாலை இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.



இதன்போது, ஆற்றில் மணல் ஏற்றிய நிலையிலிருந்த 15 படகுகளையும், அதில் இருந்த இரண்டு சந்தேகநபர்களையும் கடற்படை கைது செய்துள்ளது.
அதனையடுத்து கைதான சந்தேக நபர்கள் கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Follow Us



