Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

உலகம்
Trending

சர்வதேச சட்டங்கள் மீறப்படுவது குறித்து ஐநா கவலை! இராணுவ நடவடிக்கை தீர்வல்ல எனவும் வலியுறுத்தல்!

சர்வதேச ரீதியில் குறிப்பாக மத்திய கிழக்குப் பகுதிகளில் சர்வதேசச் சட்டங்கள் மதிக்கப்படாமல் மீறப்பட்டு வருவது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டேரெஸ் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்துப்புன்போதே அவர் இந்த கவலையை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக மத்திய கிழக்கில், போர் மற்றும் மோதல்களின் போது பின்பற்றப்பட வேண்டிய சர்வதேச விதிகள் மற்றும் சட்டங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றன.

இந்தநிலையில், மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய நெருக்கடிக்கு இராணுவ ரீதியான தீர்வு ஏதுவும் கிடையாது என்றும் குட்டேரெஸ் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

முறையை மற்றும் தீவிரமான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும்.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

எட்டப்படும் போர்நிறுத்த உடன்படிக்கைகள் எக்காரணம் கொண்டும் மீறப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.

அத்துடன், தரைமட்ட நிலவரங்களைச் சீரமைக்க இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் மிகவும் முக்கியமானது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டேரெஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button