
தென்னிந்திய தரும்புர ஆதீனத்தின் “சைவ சித்தாந்த கலாநிதி, சைவசித்தாந்த புலவர்” ஆகிய பட்டப்படிப்புகளுக்கான தொடக்க விழா நிகழ்வு யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை நாவலர் மண்டபத்தில் நேற்று(05) இடம்பெற்றது.


திருக்கையால பரம்பரைத் தரும்புர ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் திருமறைச் செப்பேடுகள் கண்டருளிய நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் நேரடித் தரிசன அருளாசியோடு இந்த நிகழ்வு இடம்பெற்றது.


இந்த நிகழ்வில், யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் போராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா, யாழ்.பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீட பீடாதிபதி பிரம்மஸ்ரீ ச. பத்மநாபக்குருக்கள், கலாநிதி ஆறுதிருமுருகன், வேலன் சுவாமிகள், மறவன்புலவு சச்சிதானந்தன்,


சைவ பரிபாலனசபை தலைவர் உ.தயானந்தன், தரும்புர ஆதீன அனைத்துலக சைவசித்தாந்த ஆராட்சி நிறுவன இயக்குநர் பேராசிரியர் கலாநிதி அருணை பாலறாவாயன், இந்துக்குருமார் ஒன்றிய தலைவர் கு.வை.க.வைத்தீஸ்வர குருக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



