இலங்கைஉலகம்மங்கையர் அரங்கம்

பிரேத அறையில் மூன்று ஊழியர்களால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட சடலம்!

குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து உயிரிழந்த யுவதியின் சடலம், டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில்
பிரேத அறையில் கடந்த 23 ஆம் திகதி வைக்கப்பட்டிருந்தது.

அன்று இரவு வைத்தியசாலையில் பணி புரியும் ஊழியர்கள் மூவர் அந்தப் பிரேத அறைக்குச் சென்று வந்தது CCTV கமராவில்
பதிவாகியிருந்தது.

அதுமட்டுமல்லாமல் இதை வைத்தியசாலை பணிப்பாளரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

சடலம் 24 ஆம் திகதி உடற்கூற்றுப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அதன் முடிவுகள் கிடைத்தன.

அப்போது அதிர்ச்சிகரமான விடயம் ஒன்று வெளிவந்திருக்கிறது.

குறித்த யுவதி இறந்ததுக்கு பின்னர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்ற விடயம் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

அதற்கு பின்னர் மார்ச் 04 ஆம் திகதி நாடாளுமன்றத்திலும் சடலத்தை வன்புணர்ந்த விடயம் ஒரு பேசுபொருளாக மாறியிருந்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button