Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

உலகம்

பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக் (Andrew Patrick) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவுக்கும் இடையிலான சந்திப்பு பத்தரமுல்ல பெலவத்தையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று(14) இடம்பெற்றது.

இலங்கையின் நிகழ்கால அரசியல் நிலைமைகள் பற்றியும், பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவுகின்ற நீண்டகால நட்புறவு பற்றியும் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.

குறிப்பாக, பிரித்தானியா எதிர்காலத்தில் இலங்கைக்கு ஒத்துழைப்பை வழங்குமென்றும் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இம்மாதம் 21 ஆம் திகதி பிரித்தானியாவுக்கு சுற்றுப்பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளமை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் பிரிவின் முதனிலை செயலாளர் டொம் சொப்பர் (Tom Soper), அரசியல் ஆலோசகர் இன்ஷாப் மாகர் (Insaf Markar) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்த சட்டத்தரணி மது கல்பனா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!
Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
Dreams Creations Photo & Video