உலகம்
Trending

லெபனான் எல்லையில் இருந்த பாதுகாப்பு தளர்த்தப்படும்: இஸ்ரேல் அறிவிப்பு!

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே பலவீனமான போர்நிறுத்தம் தொடர்ந்துவரும் நிலையில், வடக்கு எல்லைப் பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து பாதுகாப்புக் கட்டுப்பாடுகளையும் நீக்குவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

“மோதல் இடம்பெற்ற எல்லைப் பகுதியில் இன்று(22) காலை முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படும்” எனவும் தெரிவித்துள்ளது.

வடக்கு எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னர் விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் இதன்மூலம் முழுமையாக நீக்கப்படவுள்ளன.

எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள நிலையிலும், கடந்த சனிக்கிழமை லெபனானில் இஸ்ரேலியப் படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் பலர் உயிரிழந்தனர்.

இதனால், போர்நிறுத்தம் தொடர்ந்தாலும் இரு தரப்புகளுக்கிடையிலான பதற்ற நிலை முழுமையாக தணியாத சூழல் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

லெபனான் – இஸ்ரேல் எல்லைப் பகுதியில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை தொடர்ந்து சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button