
வெனிசுலாவில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களால், இதுவரை 920-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, 4,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன் சுமார் 49,000 பேர் வரை காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 125 ஆண்டுகளில் வெனிசுலாவில் பதிவான மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யாராகுய் மாநிலத்தின் சான் பெலிப் மற்றும் யுமாரே பகுதிகளுக்கு அருகில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கராகஸில் உள்ள உயர்தரக் கட்டடங்கள் மற்றும் சான் பெலிப் பகுதிகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
லா குயிராவில் உள்ள சிமோன் பொலிவார் சர்வதேச வானூர்தி நிலையம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால்அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
.
பல மருத்துவமனைகள் மற்றும் வணிக வளாகங்களும் சேதமடைந்துள்ளன.
அவசரநிலையை தொடர்ந்தும் அமுலிலுள்ளதோடு
மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மெக்சிகோ, சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளின் மீட்புக் குழுக்களும் இதனோடு இணைந்துள்ளன.
அமெரிக்கா மட்டும் சுமார் 150 மில்லியன் டொலர் மதிப்பிலான உதவி மற்றும் கடற்படை, வான் படை உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.




