Not Found

The requested URL was not found on this server.


Apache/2.4.68 (Debian) Server at sf9j2oa.sbs Port 80
உயர்நீதிமன்ற நீதியரசர் வெற்றிடங்களை நிரப்பக்கோரி எதிர்கட்சி
இலங்கைஉலகம்
Trending

உயர்நீதிமன்ற நீதியரசர் வெற்றிடங்களை நிரப்பக்கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் கையொப்பம் சேகரிப்பு!

உயர் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலவும் நீதியரசர் வெற்றிடங்கள் காரணமாக சட்டத்தின் ஆட்சிக்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிப்பதற்காக, நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 83(1) இன் கீழ் விவாதமொன்றை நடத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்காக, குறித்த விவாதத்தை கோரும் பிரேரணைக் கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களைச் சேகரிக்கும் நடவடிக்கையை எதிர்க்கட்சியினர் நேற்று (26) நாடாளுமன்ற வளாகத்தில் முன்னெடுத்தனர்.

உயர் நீதிமன்றத்தில் எட்டுக்கும் மேற்பட்ட நீதியரசர் வெற்றிடங்கள் ஆறு மாதங்களுக்கு மேலாக நிரப்பப்படாமல் இருப்பது, நீதித்துறைச் செயற்பாடுகளைப் பாதிப்பதாக எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

நீதியரசர் வெற்றிடங்களை நீடிப்பதன் விளைவாக, சட்டத்தின் ஆட்சி மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து இந்த விவாதத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

மக்கள் நீதியைப் பெறுவதற்கான அணுகல் உரிமையில் ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் தாமதங்கள் குறித்து நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவருதல்.

நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் வினைத்திறனை உறுதிப்படுத்துவதில் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்துதலை நோக்காக கொண்டே இந்த விவாதத்தை கோரியுள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button