Not Found

The requested URL was not found on this server.


Apache/2.4.68 (Debian) Server at sf9j2oa.sbs Port 80
இலங்கை ஆசிரியர் சங்க குழுவினர் நெடுந்தீவிற்கு விஜயம்!
இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
Trending

இலங்கை ஆசிரியர் சங்க குழுவினர் நெடுந்தீவிற்கு விஜயம்!

யாழ்.நெடுந்தீவு பாடசாலைகளுக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்ராலின் உள்ளிட்ட குழுவினர் நேற்று(26) கள விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது,
கடல் கடந்த தீவுகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் படகு போக்குவரத்தில் எதிர்நோக்கும் சிரமங்கள், ஆபத்துக்கள், வசதியின்மை, குறித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

சிரமங்களுக்கு மத்தியில் தங்கிநின்று பணியாற்ற செல்லும் ஆசிரியர்களுக்கு விடுதி வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை எனவும்,

ஆசிரியர்களுக்கான கஷ்ட, அதிகஷ்ட பிரதேச கொடுப்பனவுகளும் வடமாகாண கல்வி அதிகாரிகளால் நிறுத்தப்பட்டமை தொடர்பிலும் தமது கண்டனங்களையெம் வெளியிட்டனர்.

உயிர்களை பணயம் வைத்து மேற்கொள்ளப்படும் பயணம் என்பதால், அதிபர் ஆசிரியர்களுக்கு ஏனைய அரச ஊழியர்களை போல் அபாய கொடுப்பனவு வழங்கப்படும் என வடமாகாண ஆளுநரால் தீவக பிரதேசத்தில் வைத்து வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது.

இருந்த போதிலும் அந்த கொடுப்பனவு கூட அதிபர் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும்,
கடல்கடந்த பிரதேசங்களில் உணவு பொருட்களின் விலை சற்று அதிகமாக காணப்படுகின்ற போது, மாணவர்களின் போசாக்குக்கு விசேட நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படாமல் இருப்பதும் வடமாகாண கல்வி அதிகாரிகளின் அக்கறையற்ற தன்மையை வெளிப்படுத்துவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் குறிப்பிட்டுளரளனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button