உள்நாட்டு

விருப்பத்தோடு புனர்வாழ்வு பெறக்கூடிய 10 நிலையங்கள் நிறுவப்படும் – நீதி அமைச்சர்!

போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்தோடு புனர்வாழ்வு பெறக்கூடிய பத்து நிலையங்கள் நாடு முழுவதும் நிறுவப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

போதைப்பொருள் இல்லாத தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் செயல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் விருப்பத்தோடு புனர்வாழ்வு செயல்முறையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

புனர்வாழ்வு பணியகத்தின் முதல் தன்னார்வ புனர்வாழ்வு நிலையம் வெலிகந்த – நவ சேனாபுர நவோதயா தொழிற்கல்வி பயிற்சி மையத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button