யாழ்.சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட தொழிலதிபர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி தனது கடமைகளை இன்று(05) பொறுப்பேற்றார்.

இதற்கான நிகழ்வு சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் பொதுக் கூட்டமும், புதிய நிர்வாக சபைத் தெரிவும் தென்மராட்சி கலை கலாசார மண்டபத்தில் கடந்த 02 ஆம் திகதி இடம்பெற்றது.
இதன்போது, தலைவராக தொழிலதிபர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமியும்,செயலாளராக முத்துலிங்கம் கோகுலனும், பொருளாளராக மருதை உதயகுமாரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இதன்போது புதிய தலைவர் தொழிலதிபர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி,
செயலாளர் முத்துலிங்கம் கோகுலன், பொருளாளர் மருதை உதயகுமார் ஆகியோர் வர்த்தக சமூகத்தினரால் கெளரவிக்கப்பட்டனர்.



