இலங்கைவிளையாட்டு
Trending

இலங்கை – ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கட்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர் இம்மாதம் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், பிராந்தியத்தில் தற்போது நிலவும் விமானக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி இலங்கை அணியோடு ஏற்பாடு செய்திருந்த முதலாவது தொடராக இது அமைந்துள்ளது.

மூன்று T20 சர்வதேசப் போட்டிகள், இம்மாதம் 13, 15 மற்றும் 17 ஆகிய திகதிகளில் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்திலும்,

அதைத் தொடர்ந்து 20, 22 மற்றும் 25 ஆம் திகதிகளில் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் மூன்று ஒருநாள் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், குறித்த தொடரை இந்த ஆண்டின் இறுதிப் காலாண்டில் நடத்துவதற்குத் தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button