இலங்கைவடக்கு மாகாணம்
Trending

குப்பைக்காடாக காட்சியளிக்கிறது வடமராட்சி கடற்கரை

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கரையோர பகுதிகள் குப்பைக் காடாக காட்சி அளிப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு ஏற்பட்ட டித்வா புயலின் காரணமாக பெருமளவான குப்பைகள் குடிமனைக்குள் அடித்து வரப்பட்டன.

இதனை உடன் அகற்றுமாறு அல்லது எரியூட்டுமாறு உரிய தரப்பினருக்கு பொதுமக்களால் தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

குப்பைகள் அகற்றப்படுமென பிரதேசசபையால் தெரியப்படுத்தப்பட்ட போதும் பல நாட்கள் கடந்தும் பிரதேச சபையால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

குப்பைகள் வடமராட்சி கிழக்கின் பகுதிகளில் தேங்கி காணப்படுகின்றன. இதனால் டெங்கு போன்ற நோய்கள் பரவுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

மீண்டும் யாழ் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

குறித்த குப்பைகள் அகற்றப்படாமல் அதே இடத்தில் இருப்பதால் மக்கள் தொடர்ந்தும் நோய்களால் பாதிப்படைவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதோடு தேங்கி காணப்படும் குப்பைகளை அகற்றுமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button