
இலங்கை மின்சார சபை இன்று (09) முதல் அதிகாரப்பூர்வமாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
1969 ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க இலங்கை மின்சார சபைச் சட்டத்தின் கீழ் இயங்கி வந்த பழைய கட்டமைப்பு இதன் மூலம் நிறைவுக்கு வந்துள்ளது.
இந்த மாற்றம் 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் கீழ் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன் மூலம், மின் உற்பத்தி, கடத்தல், விநியோகம் மற்றும் மின் அமைப்பு இயக்கம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஆறு புதிய அரச நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
விருப்ப ஓய்வு திட்டத்தை தெரிவு செய்யாத ஊழியர்கள் புதிய நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நாளை (10) முதல் வழங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மறுசீரமைப்பால் மின் உற்பத்தி அல்லது மின் விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாதென எரிசக்தி அமைச்சு உறுதி அளித்துள்ளது.



