
இலங்கையை அண்டிய கடற்பரப்பில் ஈரானின் ஐஆர்ஐஎஸ் டேனா கப்பல் மூழ்கடிக்கப்பட்டபோது உயிழந்த ஈரானிய கடற்படையினரின் சடலங்களை ஈரானிய தூதரகத்திடம் உடனடியாக ஒப்படைக்குமாறு காலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலி துறைமுக பொலிஸார், நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விண்ணப்பத்தை பரிசீலித்த காலி நீதிமன்ற தலைமை நீதவான் சமீர தொடங்கொட இன்று (11)
இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
உயிரிழந்த ஈரான் கடற்படையினரின் 84 சடலங்கள், காலி தேசிய வைத்தியசாலையின் குளிருட்டப்பட்ட இரு அறைகளில் வைக்கப்பட்டிருந்தன.
இந்த சடலங்களையே ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு காலி தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு காலி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவேளை ஈரானிய கப்பல், தாக்கியழிக்கப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்த கடற்படையினரின் பிரேதப் பரிசோதனைகளில், குண்டு வெடிப்பு காரணமாக ஏற்பட்ட எலும்பு முறிவுகள், உள் காயங்கள், நீரில் மூழ்குதல் போன்ற காரணங்களால் இறப்புகள் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



