இலங்கைவடக்கு மாகாணம்
Trending

யாழ்.பல்கலை விரிவுரையாளர் கொலை வழக்கு சந்தேக நபர்களுக்கு 16 ஆம் திகதிவரை விளக்கமறியல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கொலை வழக்கில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம்16ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்தமருத்துவ துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர், படுகொலை செய்யப்பட்டு தனங்கிளப்பு பகுதியில் வீசப்பட்டு,சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகள் ஆகியோர்
கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய நேற்று வரை விளக்கமறியலில்

வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த வழக்கு நேற்று(02) மீண்டும் யாழ்ப்பாணம் நீதவான், எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் ஆகியோரும்,

இரண்டாவது சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்ட சிரேஷ்ட விரிவுரையாளரின் மகள் சார்பாக சட்டத்தரணி சமந்த அத்துக்கோரள உள்ளிட்ட மூன்று சட்டத்தரணிகளும் ஆஜராகினர்.

முதலாவது சந்தேக நபரான சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் சார்பாக சட்டத்தரணிகள் எவரும் மன்றில் ஆஜராகவில்லை.

இந்நிலையில், குறித்த கொலை வழக்கு தொடர்பாக சுயாதீனமான விசாரணை வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பு சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

சந்தேக நபர் தரப்பு, பாதிக்கப்பட்டோர் தரப்பு, பொலிஸார் என மூன்று தரப்புக்களின் சமர்ப்பணங்களையும் ஆராய்ந் நீதிவான் எஸ்.லெனின்குமார், சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும் இரண்டாம் சந்தேக நபர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிப்பதற்கான மனநிலையில் உள்ளாரா என்பதை உறுதிப்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு பணிப்புரையும் விடுத்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button