
சித்திரை வருடப்பிறப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிவாயு விநியோகம், இன்று(15) முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அதன்படி, லிட்ரோ எரிவாயு விநியோகம் இன்று முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்தார்.
மே மாதம் வரை தேவையான எரிவாயு கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, லாஃப்ஸ் எரிவாயு விநியோகமும் இன்று முதல் வழமை போன்று நடைபெறும் என லாபஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பிரதான முனையங்கள் வழியாக இன்று முதல் ஐயாயிரம் மெற்றிக் தொன் எரிவாயு விநியோகிக்கப்படும் என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் குறிப்புட்டுள்ளது.
Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

Follow Us



