
மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் 24 ஆவது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்களால் வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே விளையாட்டு அரங்கில் நேற்று இரவு (16) நடைபெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதற்கமைய, முதலில் துடுப்படுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 195 ஓட்டங்களை பெற்றது .
பதிலுக்கு துடிப்படுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இந்தப் போட்டியில் ஆட்ட நாயகனாக அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டார்.
Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

Follow Us



