இலங்கைஉலகம்

இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வியட்நாம் ஜனாதிபதி!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட வியட்நாம் ஜனாதிபதி டோ லாம், நாடாளுமன்றத்தில் நேற்று(08) விசேட உரையாற்றினார்.

கடந்த 11 ஆண்டுகளில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் வெளிநாட்டுத் தலைவர் இவராவார்.

இதற்கு முன்னர், கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார்.

இந்த நிலையில் வியட்நாம் ஜனாதிபதியின் உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

நாடளுமன்றத்தில் ஆற்றிய உரையில், இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு இடையேயான ஆழமான கலாசார மற்றும் பொருளாதாரத் தொடர்புகளை நினைவு கூர்ந்துள்ளார்.

“சவாலான காலங்களில் இலங்கை மீண்டு வருவதைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது” எனவும் தெரிவித்துள்ள அவர், விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இலங்கைக்குத் தனது நாடு எப்போதும் துணை நிற்கும் என உறுதியளித்துள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button