இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
Trending

வித்தியா கொலை குற்றவாளிகளின் மரணதண்டனையை உறுதிசெய்த உயர் நீதிமன்றம்!

2015ஆம் ஆண்டு யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 04 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனையை உயர் நீதிமன்றம் நேற்று(06) உறுதி செய்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் ஏற்கனவே மேல் நீதிமன்றம் விதித்த மரணதண்டனையை உறுதிசெய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

வழக்கின் ஏனைய 02 பிரதிவாதிகளின் தண்டனையை நீக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2015 மே 13ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினத்தில், யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 18 வயது மாணவியான சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டாார்.

இந்த சம்பவம் தொடர்பில் சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மாஅதிபரால் யாழ். மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்ட 07 பேருக்கும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகிய நீதிபதிகள் குழாமால் 2017 செப்டம்பர் 27ஆம் திகதி மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

மரணதண்டனையிலிருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி பிரதிவாதிகளால், உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மேன்முறையீடு தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் பிரதிவாதிகளில் ஒருவர் உயிரிழந்தார்

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button