
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் தொடர்ச்சியான பதற்றமான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, பஹ்ரைன் அரசு தனது குடிமக்கள் ஈரான் மற்றும் ஈராக் நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு முழுமையான தடை விதித்துள்ளது.
இந்த அறிவிப்பை பஹ்ரைன் உள்நாட்டு அமைச்சு வெளியிட்டுள்ளதுடன், குறித்த தீர்மானத்தைக் கடைப்பிடிக்குமாறு அனைத்து குடிமக்களையும் வலியுறுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் தொடர்ந்தும் நிலவும் நிலையற்ற போர்நிறுத்த சூழல் மற்றும் பாதுகாப்பு சவால்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹ்ரைன் உள்நாட்டு அமைச்சின் அறிக்கையை மேற்கோள்காட்டி, இந்த செய்தியை Al Jazeera வெளியிட்டுள்ளது.
பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலைமை சீரடையும் வரை இந்த பயணத் தடை அமலில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது



