உலகம்
Trending

அமெரிக்கா தனது நிலை ப்பாட்டை அடிக்கடி மாற்றுவதே பேச்சுவார்த்தை தடைப்படக் காரணம்: ஈரான் குற்றச்சாட்டு!

அமெரிக்காவுடன் சாத்தியமான உடன்படிக்கை குறித்து ஈரான் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை எனவும்,

பேச்சுவார்த்தைகளில் தனது “சிவப்பு கோடுகளை” ஈரான் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது எனவும், ஈரானிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

உடன்படிக்கை கையெழுத்தாகும் நேரம் மற்றும் இடம் குறித்து வௌியாகும் தகவல்கள் யாவும் வெறும் ஊகங்கள் மட்டுமே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருதரப்பு பேச்சுவார்த்தை உரையின் பெரும்பகுதி ஏற்கனவே இறுதி செய்யப்பட்ட போதிலும், பேச்சுவார்த்தையின் போது அமெரிக்கா தனது நிலைப்பாடுகளைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டு வருவதே
இழுபறிக்கு முக்கிய காரணம் எனவும் ஈரானின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுடனான போர் நிறுத்தம் மற்றும் உடன்படிக்கை குறித்துப் பேசி வரும் நிலையில், ஈரான் தரப்பிலிருந்து இந்த அதிகாரப்பூர்வ மறுப்பு வௌியாகியுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button