இந்தியாஇலங்கைஉலகம்
Trending

தமிழக முதல்வர் மற்றும் எதிர்கட்சி தலைவரைச் சந்தித்த தமிழ் மக்கள் பேரவை!

தமிழகத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ் தேசிய பேரவையின் உறுப்பினர்கள் தமிழக அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுடைய அலுவலகத்தில் இன்று(04) காலை இடம்பெற்றது.

இதன்போது, ஈழத் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு கூட்டாட்சி அடிப்படையிலான தீர்வை ஏற்படுத்த இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டும் என்பதுடன், மீனவர் பிரச்சினை, அகதிகள் பிரச்சினை மற்றும் ஈழத் தமிழர் விடயம் தொடர்பாக தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி மாநாட்டை நடத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது இலங்கை தமிழர்கள் எதிர்நோக்கம் அரசியல் மற்றும் மனித உரிமை சவால்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் அடங்கிய எழுத்து மூல கோரிக்கை மனு ஒன்று முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

இந்தியாவிற்கு விஜயம் மேற்குண்டுள்ள குழுவில், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன்,

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா, தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் மற்றும் சட்டத்தரணிகள் கனகரத்தினம் சுகாஷ், நடராஜா காண்டீபன் உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button