இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
Trending

கொழும்பு – காங்கேசன்துறை கடுகதி ரயில் மீண்டும் தினசரி சேவையில்!

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் நகராந்தர கடுகதி ரயில் சேவை இன்று(14) முதல் வழமைபோல் சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

ரயில் இயந்திரத் தொகுதிகளில் தட்டுப்பாடு காரணமாக, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த சேவை முன்னதாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இதனால் வடக்கு ரயில் பாதையைப் பயன்படுத்தும் பயணிகள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

இந்த நிலையை கருத்தில் கொண்டு, முன்னர் ரத்து செய்யப்பட்ட செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை சேவைகளையும் மீண்டும் இயக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன் மூலம், கொழும்பு – காங்கேசன்துறை நகராந்தர கடுகதி ரயில் சேவையை பயணிகள் வாரத்தின் அனைத்து நாட்களிலும் வழமைபோல் பயன்படுத்த முடியும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button