இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
Trending

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை - கூரிய வாள்களுடன் ஐவர் பொலிஸாரால் கைது!

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகாமையில் இளைஞன் ஒருவரை வானில் கடத்திச் சென்று தாக்குதல் நடாத்திய குற்றாச்சாட்டுடன் தொடர்புடைய ஐவர் வாள்களுடன் யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான கார் ஒன்றும் இதன்போது மீட்க்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ் இந்துக் கல்லூரிக்கு அருகில் வைத்து இளைஞன் ஒருவன், ஐவர் கொண்ட கும்பல் ஒன்றால் கடத்திச் செல்லப்பட்டிருந்தான்.

பின்னர் கும்பல், இளைஞனின் உடைகளை களைந்து சித்திரவதை செய்து தாக்குதல் நடத்தியதோடு
யாழ் பொஸ்கோ பாடசாலை அருகில் இறக்கிவிட்டுள்ளனர்.

இந்தநிலையில் இளைஞனை கடத்திச் சென்ற சந்தேகத்திற்கிடமான காரை நேற்று(09) யாழ். பொலிஸர் இடை மறித்தனர்.

நிறுத்தாது சென்றகாரை துரத்திச் சென்று இடைமறித்து பொலிஸார் சேதனையிட்டனர்.

இதன்போது காருக்குள் இரு கூரிய “வாள்”கள் காணப்பட்டதோடு, காரின் கதவு மற்றும் ஆசனங்களில் இரத்த கறையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு “சேட்”டும் இரத்தங்களுடன் மீட்கப்பட்டது.

இதையடுத்து பொலிஸார் குறித்த ஐவரிடமும் விசாரணை நடத்தியதில் 2 .5 கிராம் ஐஸ் போதைப் பொருளும் மீட்கப்படுள்ளது.

இந்தநிலையில் தாக்கி சித்திரவதை செய்யப்பட்ட இளைஞன் யாழ்.போதனாவைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button