
FIFA உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
டெக்சாஸின் ஆர்லிங்டனிலுள்ள டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஸ்பெயின் அணி, ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
போட்டியின் 22 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மிகேல் ஓயர்ஸபால் பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
தொடர்ந்து, போட்டியின் இரண்டாவது பாதியில் 58 ஆவது நிமிடத்தில் டேனி ஓல்மோவின் உதவியுடன், பெட்ரோ போரோ இரண்டாவது கோலை அடித்து ஸ்பெயினின் வெற்றியை உறுதி செய்தார்.
நடப்புத் தொடரில் பிரான்ஸ் அணி முதல் முறையாக எந்தவொரு கோலையும் பெறாமல் பின்தங்கியிருந்த்து..
தனது வலுவான தற்காப்பு ஆட்டத்தின் மூலம் பிரான்ஸின் கோல்போடும் முயற்சிகளை முறியடித்த ஸ்பெயின் அணி, இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.




