இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
Trending

யாழ்.கல்வயலில் பாலத்துக்கு அடிக்கல் நாட்டி வைப்பு!

யாழ். சாவகச்சேரி, கல்வயல் – நுணாவில் வீதியில் அமையவுள்ள பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(14) இடம்பெற்றது.

கிராமங்களிலுள்ள சிறிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் 7.9 மில்லியன் ரூபா நிதியில் இந்தப் பாலம் அமையவுள்ளது.

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், யாழ் மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர், சாவகச்சேரி நகராட்சி மன்ற செயலாளர், தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி அமைப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button